*அன்புள்ள தமிழக முதல்வர் மாண்புமிகு திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும்* மற்றும் தமிழக நிதி அமைச்சர் திரு PTR அவர்களுக்கும்,
தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ₹2,63,967 கடன்.
அந்த வகையில் எங்கள் குடும்பத்திற்க்கு ₹2,63,967 கடன். இதை நாங்கள் அடைக்க விரும்புகிறோம்.
1.தமிழக குடும்ப தலைவிகளுக்கு ₹1000 பிரதி மாதம் உரிமை தொகை தருவதாக சொன்னீர்கள். *உங்கள் ஆட்சி முழுவதும் அந்த தொகை ₹60,000 (60 மாதம் * ₹1000) எங்களுக்கு வேண்டாம்.* நீங்களே வைத்து கொள்ளுங்கள். *அந்த தொகையான ₹60,000/- எங்கள் கடனில் வரவு வைத்து கொள்ளவும்.*
2. 5 சவரன் நகை கடன் அடைத்து நகையை மீட்டு தரப்படும் என்று சொன்னீர்கள். அதை நாங்கள் சொந்தமாக அடைத்து கொள்கிறோம். *அந்த தொகையான ₹1,20,000/- எங்கள் கடனில் வரவு வைத்து கொள்ளவும்.*(5 சவரன் =40 கிராம்).
*40 கிராம்* ₹3000 =* *₹1,20,000*
3. சமையல் எரிவாயு சிலிண்டர் ( Gas) ஒரு சிலிண்டருக்கு மானியம் ரூ100 தருவதாக சொன்னீர்கள்.
*அந்த தொகை ₹6,000/- (60 மாதம் * ₹100) எங்கள் கடனில் வரவு வைத்து கொள்ளவும்.*
4.பெட்ரோலுக்கு மானியம் ரூ5 / லிட்டருக்கு தருவதாக சொன்னீர்கள்.
*ஒரு நாளைக்கு 2லிட்டர் *₹5 = ₹10 ; ஒரு மாதத்திற்கு*
*30 நாட்கள் *₹10 = ₹300*
*60 மாதங்கள் * ₹300 =₹18,000/-*
*அந்த தொகை ₹18,000/- எங்கள் கடனில் வரவு வைத்து கொள்ளவும்.*
5. ரேசன் பொருட்கள் வழியாக மாதம் ஒரு குடும்பத்திற்க்கு ₹500 மானியம் தரப்படுகிறது.
*ஒரு வருடத்திற்கு 12 * ₹500= ₹6000.* அந்த மானியம் எங்களுக்கு வேண்டாம். நிறுத்தி விடுங்கள்🙏🙏
*அந்த தொகை ₹30,000/-* (60மாதம் * ₹500) எங்கள் கடனில் வரவு வைத்து கொள்ளவும்.
6. மாத மாதம் EB Reading எடுப்பது மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ₹500 மாதம் மிச்சப்படுத்தலாம். அந்த வகையில் ₹30,000. (60 மாதம் *₹500) மிச்சப்படுத்தலாம்.
*ஆக இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை EB Reading எடுக்கவும். பிரதி மாதம் எடுக்க வேண்டாம்.*
*அதில் மிச்சப்படுத்தும் தொகையான ₹30,000/- (60 மாதம் * ₹100) எங்கள் கடனில் வரவு வைத்து கொள்ளவும்.*
1. ₹60,000
2. ₹1,20,000
3. ₹6,000
4. ₹18,000
5. ₹30,000
6. ₹30,000
--------------------------
₹ 2,64,000 /-
*எங்கள் குடும்பத்தின் கடனை அடைத்து விடுங்கள். மேற்கூறிய எங்கள் அனைத்து உறுதிமொழிக்கும் தகுந்த முறையில் உறுதிமொழி பத்திரம் தயார் செய்து நாங்கள் அதில் கையொப்பம் இட்டு தருகிறோம். நீங்கள் எங்கள் கடனை அடைத்து எங்களுக்கு _NO DUES Certificate_ கொடுக்கவும். வருங்காலத்தில் எங்கள் பெயரில் கடன் வாங்க வேண்டாம்.* 🙏🙏🙏🙏🙏
கருத்துகள்
கருத்துரையிடுக